காவிரி விவகாரத்தில் அதிமுக பெற்றுதந்த நீதிமன்ற தீர்ப்பை காப்பாற்ற முடியாத அரசாக இந்த அரசு உள்ளது
காவிரி பிரச்சனை தொடர்பாக அரசியல்கட்சியினரின் கருத்துகள் பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதலில் செயற்குழு பிறகு பொதுக்குழு கூட்டப்படும் – எடப்பாடி பழனிசாமி
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, விருகை ரவி, வேளச்சேரி அசோக் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் வருகை தந்தனர்.
இபிஎஸ் பேட்டி
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை.
மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து பேசி கருத்து கேட்டு, விவசாயிகளை அழைத்து அவர்களின் கருத்தை கேட்டு. அதன் பிறகு சட்ட நிபுணர்களை அழைத்து பேசி காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். அரசியல் கட்சி தலைவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுத்தினார்கள். எங்களது கோரிக்கையை இந்த அரசு சிந்திக்கவும் இல்லை கவலைப்படவும் இல்லை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. இது வேதனையாக உள்ளது.

திமுக, அதிமுக ஆட்சிகளின் போது காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனைகளின் ஏற்படும்போது அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டுவோம். அதிமுக பெற்ற தீர்ப்பை கூட காப்பாற்றத அரசாக இந்த அரசு உள்ளது.
அங்கு கர்நாடகாவில் இருக்கும் அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை மதிக்கிறது. விவசாயிகளை மதிக்கிறது. இங்கு இருக்கும் அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் கட்சி ஆரம்பித்த 2 கால் ஆண்டுதான் ஆகிறது. அவர்களுக்கு காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து முழுமையாக தெரியாது. வரலாறு தெரியாத ஒரு ஆட்சி தான் இந்த ஆட்சி.
அதிமுக பொதுக்குழு கூட்டப்படும். ஏற்கனவே அமைப்பு ரீதியான மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்டு இருக்கிறோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு… முதலில் செயற்குழு கூட்டப்படும்… பிறகு பொதுக்குழு கூட்டப்படும்.

